Bookmark and Share

Oru Chinna Thamarai- Vettaikaran




Actors : Vijay, Anushka
Director : Babu Sivan
Music Director : Vijay Antony
Producer : AVM & Sun Pictures




Read more...

Lyrics of Vettaikaran - oru chinna thamarai

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை போய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில் நீ ஒற்றை பூவட
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்


ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூ பூக்கும்
உன் கால் அடி தீண்டிய வார்த்தை எல்லாம்
கவிதைகளாய் மாறும்
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம் ஜன்னல்கள்


ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே ஹே
உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும்
மோட்ச்சத்தினை சேரும்
அனுமதி கேட்க்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்
நொடியில் கோடை சாயும்
உன் கைகள் கோர்க்காமல் பயங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது


ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை போய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில் நீ ஒற்றை பூவட
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்


ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

Singers          >   Suchitra, Krish
Composers    >  Vijay Antony
Song Duration >   4 :29

Read more...

Copyright  © mkmobi Group. 2010-11 All Rights Reserved. Md Karim Khan.